இதழ் - 149 இதழ் - ௧௪௯
நாள் : 16 - 03 - 2025 நாள் : ௧௬ - ௦௩ - ௨௦௨௫
அபாத்
தமிழகத்தில் மகதியருடன் தொடா்புடைய ஊர்கள் பல இடங்களில் அமைந்துள்ளன. இவர்களுடன் தொடர்புடைய ஊர்கள், அபாத் என்பது முடிவுடைய பெயர் கொண்டு வழங்கக் காணலாம். பாரசீக மொழியில் அபாத் என்பது நகரத்தைக் குறிக்கும். ஆர்க்காட்டு வட்டத்தில் மன்சரபாத், அனவரபாத், முரார்பாத், கோவையில் டாடாபாத் முதலிய ஊர்கள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் மகமதிய வகுப்பாரைக் குறிக்கும் ராவுத்தர், மரக்காயர் முதலிய பொருள்களும் ஊர்ப் பெயர்களில் புகுந்துள்ளன. தென் ஆர்க்காட்டிலுள்ள ராவுத்த நல்லூரும், இராமநாத புரத்திலுள்ள மரக்காயர் பட்டினமும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment