இதழ் - 112 இதழ் - ௧௧௨
நாள் : 16 - 06 - 2024 நாள் : ௧௬ - 0௬ - ௨௦௨௪
பழமொழி – 112
" உண்ஒட்(டு) அகல்உடைப் பார் "
விளக்கம்
திறமையற்ற ஒருவன், பிறர் துணையாலும் ஒரு காரியத்தை முடிக்கச் சக்தியற்றவனாகவே இருப்பான். இது இரந்து உண்ணும் ஓடாகிய (திருவோடு) உண்கலத்தையே உடைப்பவனின் செயலைப் போன்றதாகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
" உண்ஒட்(டு) அகல்உடைப் பார் "
உண்மை விளக்கம்
தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப
முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'
திறமையில்லாத ஒருவன் தான் செய்ய முடிந்த செயலைத் தன் திறமையின்மையால் செய்யாது அதை மறைக்க பிறர் துணை வேண்டி அவர்களிடமும் பகைமை கொண்டு இறுதியில் ஓடிவிடுவர். இவர்களின் செயல் இரந்து உண்ணும் ஓடாகிய (திருவோடு) உண்கலத்தையே உடைப்பவனின் செயலைப் போன்றதாகும் என்பதை விளக்கவே 'உண்ஒட்(டு) அகல் உடைப்பார்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment