இதழ் - 75 இதழ் - ௭௫
நாள் : 01-10-2023 நாள் : 0௧-௧0-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
டம்பம் |
வீண் பெருமை |
ஜீப் | மலையுந்து |
நிச்சயம் | உறுதி |
பாடிகாட் | மெய்ப்பாதுகாவலர் |
உபசாரம் | விருந்தோம்பல் |
- டம்பம் அடிப்பது நல்லது அல்ல.
- வீண்பெருமை பேசுவது நல்லது அல்ல.
- பாலமலை உச்சிக்கு ஜீப்பில் செல்லலாம்.
- பாலமலை உச்சிக்கு மலையுந்தில் செல்லலாம்.
- பிற உயிரினங்கள் மேல் அன்புடன் இருங்கள்; நிச்சயம் உங்களுக்கு நன்மை பயக்கும்.
- பிற உயிரினங்கள் மேல் அன்புடன் இருங்கள்; உங்களுக்கு நன்மை பயப்பது உறுதி ஆகும்.
- பாடிகார்ட் தன்னைச் சார்ந்தவரைப் பாதுகாப்பவர்.
- மெய்ப்பாதுகாவலர் தன்னைச் சார்ந்தவரைப் பாதுகாப்பவர்.
- நம் வீட்டுக்கு வருபவர்களை நாம் அன்போடு உபசாரம் செய்தல் வேண்டும்.
- நம் வீட்டுக்கு வருபவர்களை நாம் அன்போடு விருந்தோம்பல் செய்தல் வேண்டும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment