இதழ் - 126 இதழ் - ௧௨௬
நாள் : 22- 09 - 2024 நாள் : ௨௨ - ௦௯ - ௨௦௨௪
சோழமாதேவி
இராஜராஜன் தேவியருள் மற்றொரு தேவியாகிய சோழ மாதேவியின் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் பலவாகும். கோவை நாட்டு உடுமலைப்பேட்டை வட்டத்தில் சோழமாதேவி என்னும் ஊர் ஒன்று உண்டு. அது முற்காலத்தில் சோழமாதேவி நல்லூர் என வழங்கிற்றென்பது சாசனங்களால் அறியப்படும். அங்குள்ள குலசேகர ஈச்சுரம் என்னும் சிவாலயத்திற்கும், அதன் அருகே அமைந்த திருமடத்திற்கும் சோழ மன்னர் அளித்த நன்கொடை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.
திருச்சி நாட்டில் உத்தமசேரிக்கு அண்மையில் சோழமாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம் ஒன்றுள்ளது. அது முன்னாளில் விளாநாட்டைச் சேர்ந்த பிரமதேயமாக விளங்கிற்றென்று சாசனம் கூறும். இப்பொழுது அவ்வூர் சோழமாதேவி என்றே வழங்கப்படுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment