பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 195                                                                                 இதழ் - ௧௯௫
நாள்  :  22 / 03 / 2026                                                           நாள்   :  ௨௨ / 0௩ / ௨௦௨௬

 


ஆறும் குளமும் பெயரால் எழுந்த ஊர்கள்

வளைகுளம்

    வளைகுளம் என்று முன்னாளில் வழங்கிய ஊர் இந்நாளில் வளர்புரம் என்னும் பெயர் பெற்றுள்ளது. வட ஆர்க்காட்டு ஆர்க்கோண வட்டத்திலுள்ள வளர்புரத்தில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு. தொண்டீச் சரம் என்பது அதன் பெயர். சுந்தர பாண்டியன் முதலாய பண்டைத் தமிழரசர் அதற்கு நிவந்தம் விட்டுள்ளார்கள். எனவே, வட ஆர்க்காட்டிலுள்ள வளர்புரமே பழைய வளைகுளம் என்பது தெளிவாகும்.


இடைக்குளம்

    முற்காலத்தில் இடைக்குளம் என வழங்கிய ஊர் இப்பொழுது மருத்துவக்குடி என்னும் பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்திலுள்ள மருத்துவக்குடிச் சிவன் கோயிலிற் கண்ட சாசனம் திரு இடைக் குளமுடையார் என்று அங்கு எழுந்தருளிய ஈசனைக் குறித்தலால், பழைய இடைக்குளமே மருத்துவக் குடியாயிற்று என்பது விளங்குகின்றது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment