பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் : 95                                                                                                இதழ் : 
நாள்   : 18-02-2024                                                                              நாள் :  -0-௨௦௨௪ 

  
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழில் வழங்கப்படும்

பிறமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


புத்திஅறிவு
பூர்வபக்ஷம்வளர்பிறை
பௌத்திரன்பேரன்
மனப்பூர்வம்முழுமனது
வாசனைமணம்
 
  • மனிதன் புத்தி கெட்டுப் போய் சுயநலமாக இருக்கிறான்.
  • மனிதன் அறிவு கெட்டுப் போய் சுயநலமாக இருக்கிறான்.

  • பூர்வபக்ஷத்தில் நற்கருமங்களைச் செய்வர். 
  • வளர்பிறையில் நற்கருமங்களைச் செய்வர். 

  • என்னைப் போலவே எனது பௌத்திரன் உள்ளான்.
  • என்னைப் போலவே எனது பேரன் உள்ளான்.

  • மனப்பூர்வமாக உங்களை வாழ்த்துகிறேன்.
  • முழுமனதாக உங்களை வாழ்த்துகிறேன்.

  • தோட்டத்தில் உள்ள மல்லிகைப் பூக்களின் வாசனை வீடு முழுவதும் பரவியது.
  • தோட்டத்தில் உள்ள மல்லிகைப் பூக்களின் மணம் வீடு முழுவதும் பரவியது.

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment