பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 90                                                                                                       இதழ் - 0
நாள் : 14-01-2024                                                                                         நாள் : -0-௨௦௨


 
ஓவியர்
 
    ஓவியர் என்னும் சமூகத்தினர் நம் நாட்டில் வாழ்ந்து வந்த பழங்குடிகளாவர். சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். அம்மன்னன் ஆட்சி புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. 

    ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய வர்மான் நாடு என்று பெயர் பெற்றது. பின்னர் ஓய்மான் நாடென்று சிதைந்து வழங்கியிருக்கக் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள் அந்நாட்டைச் சேர்ந்த ஊர்களாயிருந்தன.  

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment