பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 195                                                                                 இதழ் - ௧௯௫
நாள்  :  22 / 03 / 2026                                                           நாள்   :  ௨௨ / 0௩ / ௨௦௨௬



பழமொழி அறிவோம்

பழமொழி – 195

' ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று '
விளக்கம்

      உள்ளத்திலே கள்ளமில்லாமல் நட்புச் செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல்லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும் என்பது இப்பழமொழியின் பொருளாகும். 


உண்மை விளக்கம்

        புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
        உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது
        கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
        'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.

    நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களின் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கும். அதில் களங்கம் இருக்காது. களங்கம் இருப்பதாய் உணர்ந்தால் அத்தகையோரின் நட்பை விலக்குதல் வேண்டும்.

    அத்தகையோரின் நட்பானது பிறர் எழுதிய செய்யுளை தாம் எழுதிய செய்யுள் என உரைப்பவர் தன்மை போன்றதாகும். ஆகையால் தம் சொல்லும் செயலும் வேறுபட்டிருக்கும் தன்மை கொண்டவரிடம் நட்பை விலக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே 'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. 

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment