இதழ் - 193 இதழ் - ௧௯௩
நாள் : 01 / 03 / 2026 நாள் : 0௧ / 0௩ / ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 193
' ஒன்றுறா முன்றிலோ இல் '
விளக்கம்
தம் வீடு தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது தவறாமல் உதவுவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.
மாரி (மழை) முக்காலத்து பெய்வது நின்று போய் உலகே வறண்டு போயிருந்தாலும் தம் வீடு தேடி வந்தவர்களுக்குப் பாரி மன்னனின் மகளானவள் நீர் உலையில் பொங்கி வைத்திருந்த சோற்றைப் பாணர்களுக்கு இன்முகத்துடன் வழங்குவாள்.
ஆகையால் வீடு தேடிச் சென்று இரந்து நின்றால் இல்லை என்று சொல்லும் வீடு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கவே 'ஒன்றுறா முன்றிலோ இல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment