பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 194                                                                                    இதழ் - ௧
நாள்  :  15 / 03 / 2026                                                                நாள்   :   / 0 / ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 194

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம் '
விளக்கம்

    அழுகின்ற குழந்தை, கழுதைப் பாலைக் குடித்த பின்னர் சிரித்தது என்று நாம் இந்தப் பழமொழிக்கு தவறாகப் புரிந்து கொள்கிறோம். 


உண்மை விளக்கம்

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம் '

       சில குழந்தைகள் பிறக்கும் போதே நோய் அறிகுறிகளுடன் பிறப்பர். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நீல நிறமாக இருக்கும். இது செவ்வாப்பு என்னும் நோய் அறிகுறி ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பர். இதற்கு முற்காலத்தில் கழுதைப் பாலை மருந்தாகக் கொடுத்து குணமடையச் செய்துள்ளனர். பின்னர் அக்குழந்தைகள் அழுகையை நிறுத்தி சிரித்து மகிழ்ந்துள்ளனர் என்பதைக் குறிக்கவே “அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்” என்று இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment