பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 34                                                                 இதழ் -
நாள் : 18-12-2022                                                     நாள் : - - ௨௦௨௨ 
 
 
 
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
மடு
    மருதநிலத்தில் காணப்படும் ஒருவகை ஆழமான நீர்நிலை மடு எனப்படும். இப்பகுதி சில இடங்களில் சேறும்சகதியும் நிறைந்தாகவும் காணப்படும். இத்தகைய பகுதியின் அருகில் தோன்றிய ஊர்களும் மருதநிலத்தில் காணப்படுகின்றன. 
 
     நெல்லை நாட்டில் கல்மடுவும், தஞ்சை நாட்டில் முதலைமடுவும், தென்னார்க்காட்டில் ஆனைமடுவும், சேலம் நாட்டில் செம்மடுவும், கொங்குநாட்டில் உள்ள செம்மேடு என்னும் செம்மடுவும் இவ்வாறு மடு என்னும் பெயரில் தோன்றிய மருதநில ஊர்ப்பெயர்களாகும்.
 
மடை
     மருதநிலங்களிலுள்ள கால்வாய்களிலும் மதகுகளிலும் கட்டப்பட்டுள்ள மதகுகள் மடை என்று வழங்கப்படுகின்றன. மடைகளின் வழியாகவே தண்ணீர் வயல்களில் சென்று பாயும். இதன் மூலம் அந்நிலம் வளம்நிறைந்தாக இருக்கும். இத்தகைய மடைகள் பக்கங்களில் சில ஊர்கள் தோன்றின. 
 
     நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல்மடையும் பாலமடையும், மதுரையிலுள்ள மேலமடையும் இவ்வாறு பெயா்ப் பெற்றுள்ளன. 
 
     கொங்குநாட்டிலுள்ள வெள்ளமடையும், காரமடையும், கரடிமடையும், பன்னீர்மடை என்னும் பன்னிடையும் மடையின் அடிப்படையில் தோன்றிய மருதநிலம் சார்ந்த ஊர்களாகும்.

 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment