பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 62                                                                                             இதழ் -  
நாள் : 02-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
 
     
வினையெச்ச வகைகள்
வினையெச்ச வகை
     வினையெச்சம் என்பது தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.

தெரிநிலை வினையெச்சம்
    செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
 
சான்று :
  • சென்று வந்தான்   
    இத்தொடரில் உள்ள சென்று என்னும் சொல் செல்லுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
 
குறிப்பு வினையெச்சம்
  • காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
சான்று
  • மெல்லப் பேசினாள்
    தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.
 
முற்றெச்சம் 
    ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

சான்று
  • உண்டான் உறங்கினான்.
    உண்டு உறங்கினான் என்பது பொருள் உண்டான் என்பது முற்றுப்போல தோன்றினாலும் எச்சப் பொருள்  தருதலினால் அது முற்றெச்சம் எனப்படுகிறது. ஆதலால் உண்டான் என்பது முற்றெச்சம்.
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment