இதழ் - 76 இதழ் - ௭௬
நாள் : 08-10-2023 நாள் : 0௮-௧0-௨௦௨௩
காலம் காட்டும் இடைநிலை
காலம் காட்டும் இடைநிலை
ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை எனப்படும்.
வகைகள்
- இறந்த கால இடைநிலைகள்
- நிகழ்கால இடைநிலைகள்
- எதிர்கால இடைநிலைகள்
இறந்த கால இடைநிலைகள் - த், ட், ற், இன்
படித்த - படி + த் + த் + அ
உண்டான் - உண் + ட் + ஆன்
ஈன்ற - ஈன் + ற் + அ
நெருங்கின - நெருங்கு+ இன் +அ
நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
வருகின்றான் - வரு + கின்று + ஆன்
எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
பார்ப்பான் - பார் + ப் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
படித்த - படி + த் + த் + அ
உண்டான் - உண் + ட் + ஆன்
ஈன்ற - ஈன் + ற் + அ
நெருங்கின - நெருங்கு+ இன் +அ
நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
வருகின்றான் - வரு + கின்று + ஆன்
எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
பார்ப்பான் - பார் + ப் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment