பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 35                                                             இதழ் -
நாள் : 25-12-2022                                                நாள் : - - ௨௦௨
 
  
 
பழமொழி – 35
 
''  யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் ''
 
         வலிமையானவர்களுக்கு ஓர் நன்மை நடந்தால் காலம் கனிந்து வரும் போது எளியோருக்கும் நன்மை நடக்கும் என்பதையே யானை, பூனை என்ற விலங்குகளின் வலிமையைக் கொண்டு நாம் தவறாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்
         ”ஆ” நெய்க்கு ஒரு காலம் வந்தால்
         ”பூ”  நெய்க்கு ஒரு காலம் வரும்
     இங்கு “ஆ“ நெய் என்பது “பசு“ வின் நெய்யையும் “பூ“ நெய் என்பது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் குறிக்கிறது.
 
     பசுவின் நெய்யைத் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உடலில் கொழுப்பு சக்தி கூடி உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பின்னர் உடல் எடையைக் குறைக்கப் பூவிலிருந்து கிடைக்கும் தேனை அருந்தும் நிலை ஏற்படும். இதனைக் குறிக்கவே “ஆ“ நெய்க்கு ஒரு காலம் வந்தால் “பூ“ நெய்க்கு ஒரு காலம் வரும் என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
 
      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment