இதழ் - 116 இதழ் - ௧௧௬
நாள் : 14- 07 - 2024 நாள் : ௧௪ - 0௭ - ௨௦௨௪
பழமொழி – 116
'உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம்
வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விளக்கம்
உமையவளைத் தம் உடம்பினில் ஒரு கூறாகக் கொண்டவன்
அவர்தம் எதிரிகளை வெற்றிகொள்வான் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.
விளக்கம்
ஒருவன் தன்னோடு நட்பு கொண்டவர்களிடமிருந்து விலகாமல் அவரைக் காத்து வருபவர் ஆயின் அந்நண்பரை எத்தகைய பகைவர் படையும் வெற்றிகொள்ள முடியாது. அத்தகைய நண்பர்கள் உமையவளைத் தம் உடம்பினில் ஒரு கூறாகக் கொண்டவன் அவர்தம் எதிரிகளை வெற்றிகொள்வான் என்பதை 'உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment