இதழ் - 174 இதழ் - ௧௭௪
நாள் : 14 - 09 - 2025 நாள் : ௧௪ - ௦௯ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 174
' ஏமரார் கோங்கு ஏறினார் '
விளக்கம்
ஒருவன் கோங்க மரத்திலே ஏறினால் பாதுகாப்புடன் இருக்க முயன்றாலும், எக்காலத்தும் தம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாதவர்களே என்பது இப்பழமொழியின் பொருளாகும். (ஏமறா - பாதுகாப்பற்ற)
உண்மை விளக்கம்
தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்
வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்
'ஏமரார் கோங்கு ஏறினார்'.
இங்கு "கோங்கு" அல்லது "கோங்கமரம்" என்பது மஞ்சள் நிற பூ பூக்கும் வலிமையற்ற ஓர் மரம் ஆகும். "ஏமரா" என்ற சொல்லுக்கு "காவலற்ற," "பாதுகாவலற்ற," அல்லது "கடுமையற்ற" என்று பொருள்.
கோங்க மரத்தில் ஏறிய ஒருவன் எப்படி பாதுகாப்பாக இருக்க முயன்றாலும் எக்காலத்திலும் தன் உயிருக்கு ஆபத்தான நிலையை கொண்டதாகும். ஏனென்றால் கோங்கமரம் வலிமையற்ற பாதுகாப்பற்ற மரமாகும். அதைப்போலவே வலிமையற்ற ஒருவன் வலிமையான மன்னரிடம் போருக்குப் போவது எக்காலத்திலும் தன் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பதைக் குறிக்கவே 'ஏமரார் கோங்கு ஏறினார்' என்று இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment