பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 52                                                                                          இதழ் -
நாள் : 23-04-2023                                                                           நாள் : -0-௨௦௨௩
 
  
 
பழமொழி – 51
 
” இரந்தூட்குப் பன்மையோ தீது “
 
விளக்கம்
 
    ஒருவன் மற்றொருவரிடம் இரந்து (பிச்சையெடுத்தல்) உண்பது இழிவான செயல். அவ்வாறு இரந்து உண்பினும் ஒருவனாகச் செல்லாமல் பலரும் சென்றால், அதைக் கொடுப்பவனையும் கொடுக்க விடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

    மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
    பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
    கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
    'இரந்தூட்குப் பன்மையோ தீது'.

    ஒருவன் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடை கொடுக்கிறான். அத்தகைய ஒருவனிடம், பலரும் சென்று யாசகம் கேட்டால் அவன் கொடுக்க மனமின்றி மறைத்துவைக்க  நேரிடும். 
 
    யாசித்து உண்பவன் ஆயினும் ஒருவனாகச் செல்ல வேண்டும். பலர் சென்று யாசகம் கேட்டால் அது தீமையேதரும் என்பதையே 'இரந்தூட்குப் பன்மையோ தீது' என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.
 
    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment