பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 133                                                                                  இதழ் - ௧
நாள் : 10- 11 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪



வழக்கு

விளக்கம்
  • வழக்கு என்பது, நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். 

வகைகள்
இந்த வழக்கு இரண்டு வகைப்படும். 
அவை, 
     1. இயல்பு வழக்கு 
     2. தகுதி வழக்கு 

இயல்பு வழக்கு
  • ஒரு பொருளைச் சுட்டுவதற்கு எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். 
  • அவை, 
    • 1. இலக்கணமுடையது
    • 2. இலக்கண போலி
    • 3. மரூஉ
      “இலக்கண முடைய திலக்கணப் போலி
       மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
       இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
       எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்” (நன்னூல்,  சூ. எண். 272)


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment