பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 133                                                                                  இதழ் - ௧
நாள் : 10- 11 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 133

“ எட்டு வருஷம் எருமைக்கடா 
ஏரிக்குப்போக வழிதேடுதாம் 

விளக்கம்
எட்டு வருடமாக ஒரு ஏாிக்குச் செல்லும் எருமைக்கிடா மீண்டும் மீண்டும் அந்த இடத்திற்குச் செல்ல மறந்து வழிதேடிச் செல்கிறது என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.


உண்மை விளக்கம்

இங்கு எருமைக்கிடா என்பது எதற்கும் பயனற்ற, மறதி உடைய ஒருவனைக் குறிக்கிறது.

ஒருவன் எட்டு வருடங்களாக ஏரிக்குப்போய் தண்ணீர் எடுத்து வருகிறான். தினமும் அவ்வழியாகச் சென்றாலும் வழியை மறந்து மற்றவர்களிடம் கேட்டுதான் அந்த ஏரிக்குச் செல்வது வழக்கம். இத்தகைய மறதி உடையவர்களைக் குறிக்கவே “எட்டு வருஷம் எருமைக்கடா ஏரிக்குப்போக வழிதேடுதாம்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment