இதழ் - 204 இதழ் - உ௰௪
நாள் : 25 / 10 / 2026 நாள் : ௨௫ / ௰ / ௨௰உ௬
திருமாந்துறை என்ற பெயருடைய ஊர் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. மற்றொன்று வைப்புத் தலமாகக் கருதப்படுகின்றது. இவ்விரு துறைகளும் ஒரு பெயருடையன. இவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு முன்னதை வடகரை மாந்துறை என்றார் திருத் தொண்டர் புராணமுடையார்.
காவிரியாற்றின் வடகரையில் அமைந்த மாந்துறையை,
"அம்பொனேர் வருகாவிரி வடகரை மாந்துறை "
என்று பாடினார் திருஞானசம்பந்தர். மேலும் வைப்புத் தலமாகிய திருமாந்துறை, கும்பகோண வட்டத்தில் திருமங்கலக் குடிக்கு அருகில் உள்ளது. அத்தலத்தையும் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது சேக்கிழார் வாக்கால் புலனாகின்றது.
" கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சி முன்போந்து
மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி "
என்னும் பாட்டின் மூலம் திருமாந்துறை இறைவற்குத் திருஞானசம்பந்தர் தமிழ்மாலை சாத்தினார் என்று தெரிகின்றது. எனினும், அப்பாடல் கிடைக்கவில்லை.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment