இதழ் - 168 இதழ் - ௧௬௮
நாள் : 03 - 08 - 2025 நாள் : ௦௩ - ௦௮ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
பொய்யாமொழியார்
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பொய்யாமொழிப் புலவர். அவர் தஞ்சாவூரை ஆண்ட சந்திரவாணன் மீது பாடிய கோவை "தஞ்சைவாணன் கோவை" என்று வழங்குகின்றது. அவருடைய வாக்கு அருள் வாக்கு என்றும், பொய்யாமொழி என்றும் கொண்டாடப்பட்டது. தொண்டை நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் பொய்யாமொழி மங்கலம் என்னும் பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. அங்குக் கடிகை என்ற தமிழ்ச் சங்கம் இருந்ததென்று திருக்கச்சூர்ச் சாசனம் தெரிவிக்கின்றது. பொய்யாமொழி மங்கலம் என்ற அவ்வூருக்கும் பொய்யாமொழிப் புலவர்க்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment