பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு என்று பொருள்படும். அது ஐந்து வகைப்படும்.
அவை,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
- ஆண்பால், பெண்பால், பலர்பால் இம்மூன்றும் உயர்திணைக்கு உரியவை.
- ஒன்றன்பால், பலவின்பால் இவை இரண்டும் அஃறிணைக்கு உரியவை.
ஆண்பால்
- உயர்திணையில் ஆண் நபரைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.
சான்று
- கண்ணன், அண்ணன், கந்தன்.
பெண்பால்
- உயர்திணையில் பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.
சான்று
- சீதை, தமக்கை, வள்ளி
பலர்பால்
- உயர்திணையில் ஆண், பெண் இரு பாலரையும் குறிப்பது பலர்பால் எனப்படும்.
- மாந்தர், மக்கள், பலர்
ஒன்றன்பால்
- அஃறிணையில் ஒரு பொருள் மற்றும் உயர் திணை தவிர அனைத்தையும் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.
சான்று
- மாடு, கிளை, குயில்
பலவின்பால்
- அஃறிணையில் ஒன்றிற்கு மேற்பட்ட பல பொருட்களையோ அல்லது உயர்திணை அல்லாத பிற உயிரினங்களையோ குறிப்பது பலவின்பால் ஆகும்.
சான்று
- மரங்கள், கிளைகள், குயில்கள்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment