இதழ் - 152 இதழ் - ௧௫௨
நாள் : 06 - 04 - 2025 நாள் : ௦௬ - ௦௪ - ௨௦௨௫
நிரல்நிறைப் பொருள்கோள்
விளக்கம்
- ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
வேறுநிரல் நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும், பொருள்கோள் நிரனிறை நெறியே “
- நன்னூல் நூற்பா எ. 414
உதாரணம்
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது “
- திருக்குறள்
கணவனும் மனைவியுமாக இணைந்து அன்பு செய்வதே இல்வாழ்க்கையின் பண்பாகும். இருவரும் செய்யும் அறமே இல்வாழ்க்கையின் பயனாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து. இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாவது, அன்பும் அறனும் உடையதாய் இருப்பதே ஆகும் என இரு அடிகளிலும் சொற்கள் நிரல்நிறையாக வந்துள்ளதால் இது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும்.
வகை
நிரல்நிறைப் பொருள்கோள் இரு வகைப்படும்.
- முறை நிரல்நிறைப் பொருள்கோள்
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020.
No comments:
Post a Comment