பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 171                                                                                  இதழ் - ௧
நாள் : 24 - 08 - 2025                                                            நாள் :  - ௨௦௨

 



ஆட்பெயரால் எழுந்த ஊர்கள் 

கீரன்

     பழந்தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலிய பெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் கலந்துள்ளன. கீரன் என்னும் பழம் பெயருக்குப் பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது. கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் உண்டு. 

ஆதன்

ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப் பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்று குறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ் நாட்டில் காணப்படும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment