இதழ் - 69 இதழ் - ௬௯
நாள் : 20-08-2023 நாள் : ௨0-0அ-௨௦௨௩
பழமொழி – 69
” ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் ”
தவறான விளக்கம்
நடனம் ஆடத் தெரியாத மங்கை அல்லது ஆட இயலாத ஒருவள் தன் குறையை வெளிப்படையாகத் தெரிவிக்க ஐயுற்று கூடம் (மேடை) சரியில்லை என்று குறை கூறுவதாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
” ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் ”
உண்மை விளக்கம்
ஒருவர் தனக்குத் தெரியாத செயல்களைத் தெரிந்தவர்கள் போலக் காட்டிக் கொள்வதும் சபையினருக்குத் தெரிந்து விட்டால் அது தன் மதிப்பை இழக்கச் செய்யும் என்றும் எண்ணி, தன் இயலாமையை வெளிப்படுத்த துணிவின்றி, தன் சுற்றத்தைக் குறை கூறுவர். இத்தகைய ஒருவரைச் சுட்டிக் காண்பிக்கவே “ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்” என்று நம் முன்னோர்கள் இப்பழமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment