இதழ் - 64 இதழ் - ௬௪
நாள் : 16-07-2023 நாள் : ௧௬-0௭-௨௦௨௩ தாளும் அடியும்
முற்காலத்தில் பெரிய மரங்களின் அடியில் சில குடியிருப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் அக்குடியிறுப்புகள் பெருகி நாளடைவில் ஊர்களாயிருக்கின்றன. அவ்வூர்களின் வரலாறு அவற்றின் பெயரால் அறியமுடிகிறது.
திருப்பனந்தாள் என்னும் பழமையான ஊர் பனங்காட்டில் எழுந்த ஊராகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் முருகந்தாள் என்பது ஓர் ஊரின் பெயர். நெல்லை நாட்டில் ஆலந்தாள், ஈச்சந்தாள், கருவந்தாள் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று தாள் என்ற பொருளைத் தரும் அடி என்னும் சொல்லால் அமைந்த ஊர்களும் காணப்படுகின்றன. மாவடி, ஆலடி, இலவடி, மூங்கிலடி, கீழடி, தாளவடி, ஆவடி முதலிய ஊர்கள் இத்தகைய ஊர்ப்பெயருக்குச் சான்றுகளாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 
No comments:
Post a Comment