இதழ் - 131 இதழ் - ௧௩௧
நாள் : 27- 10 - 2024 நாள் : ௨௭ - ௧௦ - ௨௦௨௪
முதல் குலோத்துங்க சோழன்
இராஜேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை சான்றவன் முதல் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியில் பாராட்டப்படுகின்ற அரசன் இவனே.
சிறந்த கருணாகரத் தொண்டைமான் என்னும் படைத்தலைவன் இச்சோழ மன்னனது ஆணையால் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றியும் புகழும் பெற்ற செய்தியைக் கலிங்கத்துப் பரணி எடுத்துரைக்கின்றது. குலோத்துங்கன் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலான பட்டங்களைத் தாங்கி நின்றான்.
சுங்கம் தவிர்த்த சோழன் என்னும் விருதுப் பெயரும் அவனுக்குரியதாகும். தஞ்சாவூரின் அருகேயுள்ள கருந்திட்டைக்குடி அம்மன்னன் காலத்தில் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என வழங்கலாயிற்று.
முதல் குலோத்துங்க சோழன் தன் தேவியாகிய கம்பதேவியின் விருப்பத்திற்கு இணங்கித் தொண்டை நாட்டுச் சிற்றீசம்பாக்கம் என்ற ஊருக்குக் கம்பதேவி நல்லூர் எனப் பெயரிட்டுக் காஞ்சிபுரக் கோவிலுக்கு நிவந்தமாக அளித்தான் என்னும் செய்தி ஒரு சாசனத்தால் விளங்குகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment