இதழ் - 158 இதழ் - ௧௫௮
நாள் : 18 - 05 - 2025 நாள் : ௧௮ - ௦௫ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 158
“எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்”
விளக்கம்
எருக்கந்தூரில் மறைந்து இருப்பவனை யானை எளிதாக மிதித்து விடுவது போல, அறியாமையால் இருக்கும் மனிதர்கள் விரைவில் அழிந்துபடுவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
“எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்”
உண்மை விளக்கம்
எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால், 'எருக்கு
மறைந்து யானை பாய்ச்சி விடல்'.
கல்வி அறிவுடைய சான்றோர்களைக் கல்வியறிவில்லாத அறியாமை உடையவர்கள் பல இடங்களில் வெறுக்குமாறு செய்து விடுகின்றனர். அத்தகையவர்கள் இறுதியில் அழிவது உறுதி. இத்தகையோரது செயல் எருக்கந்தூரில் மறைந்து இருப்பவனை, யானை எளிதாக மிதித்துக் கொன்று விடுவது போல, அறியாமையால் இருக்கும் மனிதர்கள் விரைவில் அழிந்துபடுவர் என்பதைக் குறிக்கவே 'எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment