இதழ் - 16 இதழ் - ௧௬
நாள் : 14-8-2022 நாள் : ௧௪-௮-௨௦௨௨
பழமொழி – 16
'அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்'
நற்குடியில் பிறந்த ஒருவன் வறுமையின் காரணமாக ஏழ்மையாக இருந்தாலும் எத்தகைய தாழ்ச்சி அடைந்தாலும் அவனது உயர்ந்த தன்மைகள் (குணங்கள்) மாறாது. மேலும் அவனைச் சான்றோர்கள் மதித்துப் போற்றுவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'
உயர்ந்த மணிகளின் (முத்து, பவளம், இரத்தினம் முதலான) தன்மையை அறிந்த சான்றோர்கள் அம்மணிகள் சேற்றில் கிடந்தாலும் அதனை மணிகளாகவே பார்ப்பர். ஏனெனில் அவர்கள் அதன் தன்மையையும் சிறப்பையும் அறிந்தவர்களாவர்.
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'
உயர்ந்த மணிகளின் (முத்து, பவளம், இரத்தினம் முதலான) தன்மையை அறிந்த சான்றோர்கள் அம்மணிகள் சேற்றில் கிடந்தாலும் அதனை மணிகளாகவே பார்ப்பர். ஏனெனில் அவர்கள் அதன் தன்மையையும் சிறப்பையும் அறிந்தவர்களாவர்.
அதைப்போலவே, ஒருவன் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் வறுமையால் நிலைமாறிச் சென்றாலும் தாழ்வு அடைந்திருந்தாலும் அவன் குடிப்பிறப்பையும் அவனின் சிறப்பையும் அறிந்த சான்றோர்கள் அவனைப் புறம்தள்ள மாட்டார்கள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உயர்ந்தோரின் தன்மையை உயர்ந்தோர் மட்டுமே அறிவர் என்பது இப்பழமொழியின் உட்பொருளாகும்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment