பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 64                                                                                          இதழ் -
நாள் : 16-07-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
   
 
பழமொழி – 63 

” இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம் “
 
விளக்கம்
     ஒரு செயலைச் செய்ய ஒருவனை நியமிக்கும் போது, அச்செயலின் பயனை அவனே எடுத்துக்கொள்ளும் இயல்பினை உடையவன் என்றால் அத்தகைய ஒருவனை அச்செயலுக்கு நியமிக்கக் கூடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

     கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
     பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
     தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே
     அட்டாரை ஒட்டாக் கலம்'.


     கையினாலே தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளாத பொருள் உலகில் ஒன்றுமே இல்லை. சமையல் செய்தவரை சமையல் பாத்திரம் எவ்வாறு ஒட்டிக் கொள்ளுமோ அதைப்போல கட்டுப்பாடு இல்லாத ஒருவனைத் தொடர்ந்து ஒரு செயலைச் செய்யுமாறு சொல்வதால் அச்செயலால் ஏற்படும் பயன் அனைத்தையும் அவன் எடுத்துக்கொள்வான். அத்தகைய ஒருவனை ஒருபோதும் அச்செயலில் ஈடுபடுத்தக்கூடாது என்பதையே 'இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment