இதழ் - 79 இதழ் - ௭௯
நாள் : 29-10-2023 நாள் : ௨௯-௧0-௨௦௨௩
விகாரம்
விகாரம்
பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
விகாரத்தில் ஓர் எழுத்து தோன்றியும் மற்றொரு எழுத்தாக திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும்.
சான்று
- நின்றான் = நில்(ன்) + ற் + ஆன்
- இதில் “நில்” என்னும் பகுதியில் “ல்” ஆனது “ன்” ஆகத் திரிந்தது.
- வணங்கிய = வணங்கு + இ(ன்) + ய் + அ
- இதில் “இ(ன்)” என்னும் இடைநிலையில் ”ன”கரம் கெட்டது.
- கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்
- இதில் “காண்” என்னும் பகுதி “கண்” எனக் குறுகியது.
- எழுதினோர் = எழுது + இன் + ஓர் (ஆர்)
- இதில் “ஆர்” என்னும் விகுதி “ஓர்” என நின்றது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020.
No comments:
Post a Comment