பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 99                                                                                               இதழ் - 
நாள் : 17-03-2024                                                                                நாள் : -0-௨௦௨


ஆதி நீடல்

  • ஆதி நீடல் என்னும் விதியாவது, முதல் எழுத்து மீண்டும் புணர்வது.
சான்று

1. பாசிலை = பசுமை + இலை
    • பசு(மை) + இலை = “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விகுதி கெட்டது.
    • பசு + இலை – “ஆதி நீடல்” விதிப்படி 'ப' என்னும் குறில் ‘பா’ என்னும் நெடிலாகியது.
    • பாசு( ச் +உ) + இலை – “உயிர்வரின் உக்குறள் (உ) மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி உகரம் நீங்கியது.
    • பா (ச்+இ) லை  - “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி “பாசிலை“ எனப் புணர்ந்தது.

2.  மூதூர் = முதுமை + ஊர்   
    • மூதூர் = முதுமை + ஊர்   “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விகுதி கெட்டது. 
    • முது + ஊர் - “ஆதி நீடல்” விதிப்படி 'மு' என்னும் குறில் ‘மூ’ என்னும் நெடிலாகியது.
    • மூது + ஊர் - “உயிர்வரின் உக்குறள் (உ) மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி உகரம் நீங்கியது.
    • மூத் + ஊர் - “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி “மூதூர்” எனப் புணர்ந்தது.

          தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 

No comments:

Post a Comment