இதழ் - 87 இதழ் - ௮௭
நாள் : 24-12-2023 நாள் : ௨௪-௧௨-௨௦௨௩
பழமொழி – 87
” ராஜமுகத்துக்கு எலுமிச்சம்பழம் ”
விளக்கம்
நாம் வயதில் பெரியோரையோ, உயர் பதவியில் இருப்பவரையோ சந்திக்கச் செல்லும் போது மரியாதை நிமித்தமாக எலுமிச்சம் பழத்தைக் கையில் கொடுத்து சந்திப்பது வழக்கம். ஏனெனில் எத்தகைய உயர்ந்த கனிகள் செய்யாத பணியை இச்சிறு எலுமிச்சை செய்யும் என்பது இப்பழமொழியின் விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
இங்கு பெரியோர்களை எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து சந்திப்பது மரியாதை நிமித்தமாகவே இருப்பினும் ஒரு செயலைத் திறமையாகச் செய்யத் தெரிந்தவர்கள் அப்பணியின் நிலையை உணர்ந்து மிகவும் சிக்கனமாகச் செய்து முடிப்பர் என்பதை உணர்த்தவே “ராஜமுகத்துக்கு எலுமிச்சம்பழம்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment