பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 197                                                                          இதழ் - ௧
நாள்  :  12 / 04 / 2026                                                      நாள்   :   / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 
பாடாண்படலம்

பாடாண்படலம்

    புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்கம் ஆகியவற்றில் சிறப்பைப் பெற்ற ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைக் கூறுவது பாடாண் திணை எனப்படும்.

பாடாண்திணை துறைகள் மொத்தம் – 47

11. வேள்விநிலை
அரசனுடைய வேள்வியைச் சிறப்பித்துக் கூறுவது.
12. வெள்ளிநிலை
அரசனின் செங்கோன்மையைக் கோள் வழிச் சிறப்பிப்பது.
13. நாடு வாழ்த்து
ஓர் அரசனுடைய நாட்டை வாழ்த்திக் கூறுவது.
14. கிணைநிலை
கிணைப்பறை கொட்டுபவனுடைய நிலையை உரைப்பது. 
15. களவழி வாழ்த்து
போரில் பெற்ற செல்வத்தை வாழ்த்துவது.
16. வீற்று இனிதிருந்த பெருமங்கலம்
அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.
17. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
பகையரசரை வென்று அவர்தம் குடுமியைக் களைந்த நிலையைக் கூறுவது.
18. மண் மங்கலம்
அரசன் மகளிரோடு புணர்ந்து மகிழ்வது.
19. பொலிவு மங்கலம்
மன்னனின் மகப்பேற்றினைப் புகழ்ந்துக் கூறுவது.
20. நாள் மங்கலம்
அரசனது பிறந்தநாளைச் சிறப்பித்துக் கூறுவது.
21. பரிசில்நிலை
பரிசு பெற்றோன் தன் ஊருக்குச் செல்ல விரும்புவது.
22. பரிசில்விடை
பரிசிலருக்குப் பொருள் வழங்கிச் சென்று வருக என விடைக் கொடுப்பது.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment