இதழ் - 162 இதழ் - ௧௬௨
நாள் : 22 - 06 - 2025 நாள் : ௨௨ - ௦௬ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 162
' கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? '
விளக்கம்
நம் கையில் ஏற்பட்ட புண்ணைப் பாா்க்கக் கண்ணாடி தேவையில்லை. அதை நேரடியாகவே காணலாம் என்பது இப்பழமொழியின் பொருள் ஆகும்.
உண்மை விளக்கம்
ஒரு செயலைச் செய்யும் முன் தெளிவாகவும் விளக்கமாகவும் செய்யத்துணிந்தால் அச்செயலுக்கு மீண்டும் விளக்கம் தேவையில்லை. அது கையில் ஏற்பட்ட புண்ணை பாா்ப்பதற்கு எப்படி கண்ணாடி தேவையில்லையோ அதைப் போன்றே தெளிவாகச் செய்யும் செயலுக்கு விளக்கம் தேவையில்லை என்பதைக் குறிக்கவே “கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?” என்ற இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனா்.
நாம் எந்தச் செயலைச் செய்தாலும் தெளிவாகவும் விளக்கத்துடனும் (அக்கறையுடன்) செய்யவேண்டும் என்பதை குறிப்பதற்கே இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனா். .
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment