இதழ் - 150 இதழ் - ௧௫0
நாள் : 23 - 03 - 2025 நாள் : ௨௩ - ௦௩ - ௨௦௨௫
உசேன்
தமிழகத்தில் மகமதியரைக் குறிக்கும் ராவுத்தர், மரக்காயர் முதலிய பொருள்களும் ஊர்ப் பெயர்களில் புகுந்துள்ளன. தென் ஆர்க்காட்டிலுள்ள ராவுத்த நல்லூரும், இராமநாத புரத்திலுள்ள மரக்காயர் பட்டினமும் இதற்குச் சான்றாகும்.
வட ஆர்க்காட்டு வேலூருக்கு அருகே ஊசூர் என்னும் ஊர் உள்ளது. அஃது உசேன் என்ற மகமதியர் பெயரால் அமைந்த ஊராகும். உசேனூர் என்பது ஊசூர் என மருவிற்று. உசேன்பாத் என்னும் பெயரும் அதற்குண்டு. இன்னும் வட ஆர்க்காட்டுப் போளூர் வட்டத்தில் அலியாபாத் என்னும் ஊரும், மன்சராபாத் என்னும் துருக்கமும் உள்ளன. அவை, முறையே அலி, மன்சூர் என்ற இரு மகமதியர் பெயரைக் கொண்டுள்ளன.
திருச்சி நாட்டிலுள்ள லால்குடி என்னும் ஊருக்கு அப்பெயரிட்ட மகமதியரே, முன்னாளில் தவத்துறை என்பது அதன் பெயர். அங்குள்ள திருக்கோயிலின் செங்கோபுரத்தைக் கண்டு லால்குடி என்று அவ்வூரை மகமதி குறித்தார்கள். பாரசீக மொழியில் லால்குடி என்பதற்குச் செம்பதுமை எனப் பொருள்படும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment