பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 
இதழ் - 70                                                                                        இதழ் - 0
நாள் : 27-08-2023                                                                         நாள் : -0-௨௦௨௩

   
பழமொழி – 70

” இல்லையே தாம் தர வாரா நோய்
 
விளக்கம்
    ஒருவன் குற்றமுள்ள செயலில் ஈடுபட்டுத் தமக்குத்தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வான் என்பது இப்பழமொழியின்  பொருளாகும்.
 
        ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
        மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
        தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே
        தாஅம் தரவாரா நோய்'.
 
     உலகம் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவன் மாவலி என்னும் அரசன். 'எனக்கு எல்லாம் முடியும்! எனக்கு எல்லாம் எளிதே' என்று தன் குருவான சுக்கிரர் தடுத்தும் கேளாமல், செருக்கினால் மிகுந்து, இரந்து வந்த வாமனனுக்கு மூன்றடி மண் மட்டுமே  கொடுத்தான். அதன் பயன், தான் கொண்ட செல்வம் அனைத்தையும் இழந்து விட்டான்.
 
    அதுபோல ஒருவன் தான் செய்வது குற்றம் எனத் தெரிந்தும் அச்செயலைச் செய்யத் தொடங்கினால் தமக்குக் தாமே பெருந்துன்பங்களைத் தேடிக் கொள்வான் என்பதையே 'இல்லையே தாஅம் தரவாரா நோய்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. 
 
     மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment