இதழ் - 163 இதழ் - ௧௬௩
நாள் : 28 - 06 - 2025 நாள் : ௨௮ - ௦௬ - ௨௦௨௫
ஒரு பொருளுக்குரிய இனமாக இல்லாமல் இருப்பினும் அப்பொருளின் சிறப்புக் கருதி வழங்கப்படும் அடைமொழியே இனமில்லா அடைமொழி ஆகும்.
உதாரணம்
கருநிலவு
இங்கு, நிலவானது வெண்மையானது; கருமை அதன் இனமன்று. எனினும் நிலைவைச் சிறப்பித்துக் கூற கருநிலவு எனப்படுகிறது. ”கருமை” என்பது “நிலவின்” இனமல்ல. எனினும் கருநிலவு என்று அடைமொழியாக வந்துள்ளது. இது இனமில்லா அடைமொழி ஆகும்.
தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment