பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 72                                                                                        இதழ் - 
நாள் : 10-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
 
 
 
 
பகுபத உறுப்புகள்
பகுபதம்
    ஒரு சொல்லைப் (பதம்) பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் ஆகும். அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படும்.
 
    “ பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
     சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
     முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்” 
                            - நன்னூல் நூற்பா. எண்.133

பகுபத வகைகள்
 
    பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும். இவற்றுள் பகுபதத்தின் அடிப்படை உறுப்புகள் பகுதி, விகுதி ஆகிய இரண்டாகும்.
 
பகுதி
     பகுதியை முதனிலை என்றும் அழைப்பர். பகுபதத்தில் முதலில் அமைந்து பொருளைத் தருவது பகுதி எனப்படும். பகுதி பெரும்பாலும் கட்டளைப் பொருளில் வரும். பகுதி என்பது தனிச்சொல் இதனை மேலும் பகுக்க இயலாது. தத்தம் பகாப்பதங்களே பகுதி எனப்படும்.
 
சான்று
        வந்தான் = வா + த் (ந்) + த் + ஆன்
        இதில் ‘வா’ என்பது பகுதி ஆகும்.
  
        தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment