பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 126                                                                                     இதழ் - ௧௨௬
நாள் : 22- 09 - 2024                                                                  நாள் : ௨௨ - ௦௯ - ௨௦௨௪



பெயரெச்சத்தொடர்

  • முற்றுப்பெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர்  எனப்படும்.
சான்று
  • சென்ற கோதை
   இத்தொடரில் 'சென்ற' என்னும் எச்ச வினை 'கோதை' என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.

  • வரைந்த ஓவியம் 
   இதில் 'வரைந்த' என்னும் எச்ச வினை 'ஓவியம் 'என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர்  எனப்படும்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment