பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 174                                                                                     இதழ் - ௧
நாள் : 14 - 09 - 2025                                                                   நாள் :   - ௨௦௨


 



சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


காவும் காடும்

  நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில் விளங்கக் காணலாம். அவற்றுள் சில காவும் காடும் தேவாரப் பாட்டிலே காணப் படுகின்றன.

திருவானைக்கா

  காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ்சோலையில் காட்சியளித்த ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து வழிபட்டமையால் திரு ஆனைக்கா என்று அத்தலத்திற்குப் பெயர் வந்த தென்பர். அக்காவிலுள்ள திருக்கோவில் ஜம்புகேச்சுரம் எனப்படும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment