பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 185                                                                     இதழ் - ௧௮௫
நாள் :  21 - 12 - 2025                                                   நாள் :  ௨௧ - ௧௨ - ௨௦௨௫ 


பழமொழி அறிவோம்

பழமொழி – 185

' கை காய்த்தால் கமுகு காய்க்கும் ' 
விளக்கம்

     ஒருவனுடைய கை காய்த்துப் போகும் அளவிற்கு வேலை செய்தால் மட்டுமே அவன் வயலில் கமுகு (பாக்கு) காய்க்கும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.

உண்மை விளக்கம்

                                ' கை காய்த்தால் கமுகு காய்க்கும் ' 

     ஒருவன் தன் வயலில் கை காய்த்துப் போகும் அளவிற்குக் கடினமாக உழைத்தால் மட்டுமே அவன் வயலில் உள்ள கமுகு மரம் காய்த்து நல்ல இலாபம் பெறமுடியும். அதுபோலவே ஒருவன் தன் உடலில் திறன் உள்ளபோதே கடுமையாக உழைத்து தம் எதிர்காலத்திற்காகச் செல்வங்களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே “கை காய்த்தால் கமுகு காய்க்கும்” இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனர். 

  இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment