இதழ் - 141 இதழ் - ௧௪௧
நாள் : 12 - 01 - 2025 நாள் : ௧௨ - ௦௧ - ௨௦௨௫
வினா வகை
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம்மொழியை ஒருவருடன் ஒருவர் வினா தொடுப்பதாலும் அதற்கேற்ப விடை கூறுவதாலும் கூட வளர்ச்சியடைகிறது எனலாம். பல்வேறு சூழல்களில் வினாக்கள் வினவுகிறோம், விடைகள் கூறுகிறோம்.
வினாக்கள் வகைகள்
அவ்வாறு பார்க்கின்றபோது வினா ஆறு வகைப்படும்.
அவை,
- அறிவினா
- அறியா வினா
- ஐயவினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
“அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்”
- நன்னூல் நூற்பா எ. 385
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment