பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 116                                                                                                              இதழ் - ௧௧
நாள் : 14- 07 - 2024                                                                                           நாள் :  - 0 - ௨௦௨௪



சோழ நாட்டு மன்னர்

அரிஞ்சயன் 

      கண்டராதித்தன் காலம் சென்ற பின்பு, அவன் தம்பியாகிய அரிஞ்சயன் பட்டம் எய்திச் சில காலம் அரசாண்டான். பாண்டியனோடு நிகழ்த்திய போரில் அவன் உயிர் இழந்தான். இவ்வாறு அகால மரணமுற்ற அரிஞ்சயன் உயிர் சாந்தி பெறுமாறு பள்ளிப் படையாக இராஜராஜன் அமைத்த ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று பெயர் பெற்றது.

சுந்தர சோழன் 

      அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன்  மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபுரம் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழவரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம்மன்னனைப் 'பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்' எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம் என்னும் பெருங் கோயிலுள் இவ் விருவரின் படிமங்களையும் குந்தவைப் பிராட்டியார் நிறுவியுள்ளார்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment