பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 45                                                                                           இதழ் - ௪௫
நாள் : 05-03-2023                                                                            நாள் : 0௫-0-௨௦௨௩
 
 
   

பழமொழி–45

” புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று “

     ஒருவன் ஏதாவது ஒரு செயலில் மனம் வெதும்பி துன்பப்பட்டுக் கொண்டிருந்தால் புகை (புகையிலைப் பொருள்கள்) விட்டுத் தேற்ற வேண்டும் என்று நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.


உண்மை விளக்கம்

” புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று “   

     இங்கு புக (புதிய எண்ணங்கள் உட்செல்ல) என்ற சொல் மருவி புகை (புகையிலைப் பொருள்கள்) என்று வந்துள்ளது.

        ஒருவன் ஏதாவது ஒரு செயலில் மனநிலை துன்பப்பட்டு உழன்றான் என்றால், அம்மனநிலை மனஅமைதி பெற வேறு ஏதாவது மகிழ்ச்சி தரும் செயலில் மனதை உட்செலுத்த (நினைக்க) வேண்டும் என்பதையே ”புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.

         இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment