இதழ் - 73 இதழ் - ௭௩
நாள் : 17-09-2023 நாள் : ௧௭-0௯-௨௦௨௩
பழமொழி – 73
” கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் ”
விளக்கம்
கழுதையானது தன் மேய்ச்சல் முடிந்து ஏதாவது குட்டிச்சுவரின் கீழ் படுத்துறங்கும். அக்கழுதைக்கு அந்தக் குட்டிச்சுவரே பரதேசம் (சுவர்கம்) என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
ஒருவன் குறுகிய நோக்கம் கொண்டவனாக இருப்பானாயின் அவன் பெரிய வெற்றியை அடையமாட்டான். அத்தகைய ஒருவன் பரந்த அளவில் சிந்திக்காமல் குறுகிய அளவில் மட்டுமே சிந்திப்பான். இவர்களைப் போன்றோரைக் குறிப்பால் உணர்த்தவே “கழுதைக்கு பரதேசம் குட்டிச்சுவர்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment