பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 120                                                                                              இதழ் - ௧
நாள் : 10- 08 - 2024                                                                             நாள் :  -  - ௨௦௨௪



ஔவை (கி.பி -2)



ஔவையின் பாடல்கள் மூலம் அறியப் பெற்ற செய்திகள் 

  • ஐயவி புகைத்தல் சமாதானத்தின் அடையாளம்.    ( புறநானூறு - 98 )
(ஐயவி என்பது கடுகு ஆகும். இதனை சங்க மக்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதனை 2000 ஆண்டு பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்)
  • அதியர் குடியினர் முதன்முதலில் கரும்பை இறக்குமதி செய்து பயிரிட்டனர்.                  ( புறநானூறு  - 99, 392 )
  • தமிழறிவு மாத்திரமன்றி அரசியல் அறிவும் ராஜதந்திரத்திறமையும் அன்பும் நட்பும் குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத அச்சமின்மையும் நகைச்சுவை உணர்வு கொண்டவளாகவும் பெண்ணியவாதியாகவும் இருந்துள்ளாள் என்பதனை அவளது சங்கப் பாடல்கள்  மூலமும் அறிந்து கொள்ளலாம்.
  • ஔவையின் அகப்பாடலும் புறப்பாடலும் இலக்கியச்சுவை மிகுந்ததாக உள்ளன.
வரும் கிழமையும் ஔவை வருவாள்...... 


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment