பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 70                                                                                        இதழ் - 0
நாள் : 27-08-2023                                                                         நாள் : -0-௨௦௨௩

 
 
 
இஞ்சி
 
        பழங்காலத்தில் தமிழக நகரங்களில் கட்டப்பட்டிருந்த கோட்டையின் மதிற்சுவர் இஞ்சி என்ற சொல்லாற் குறிக்கப்படும். பாண்டி நாட்டில் மதுரைக்கு அண்மையில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்னும் ஊர்கள் உள்ளன. பழஞ்சி என்பது பழ இஞ்சி என்பதன் சிதைவாகத் தோன்றுகின்றது. இவற்றால் பண்டைய நகரத்தின் கோட்டை மதில்களின் எல்லையை ஒருவாறு அறிந்துகொள்ளலாகும்.

        நெல்லை நாட்டில் நாங்குனேரிக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் பெரும் பழஞ்சி, சிறு பழஞ்சி என்னும் இரண்டு ஊர்கள் உண்டு. அவை பழங் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. இக்காலத்தில் பெரும் பழஞ்சிக்கு வழங்கும் தளபதி சமுத்திரம் என்னும் பெயரும் அவ்வூரின் வீரத் தன்மையை விளக்குகின்றது. 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment