பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 128                                                                               இதழ் - ௧
நாள் : 06- 10 - 2024                                                             நாள் :  -  - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 128

 உலகினுள் இல்லதற்(கு) இல்லை பெயர் 

விளக்கம்

உலகில் இல்லாத ஒரு பொருளுக்கு பெயரும் இருப்பதில்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


உண்மை விளக்கம்

முடிந்தற்(கு) இல்லை முயற்சி; முடியாது
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம்; - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம்; 'உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர்'

எந்த ஒரு செயலையும் முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அச்செயலை முடிக்காமல் இடையே விட்டு விடுவதும் முன்னரே முடிந்த செயலுக்கு தற்போது முயற்சி எடுப்பதும் நன்மை பயப்பதில்லை. ஆகையால் அத்தகைய செயலுக்கு நற்பெயர் கிடைப்பதில்லை என்பதையே 'உலகினுள் இல்லதற்(கு) இல்லை பெயர்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…


முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment