பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 136                                                                             இதழ் - ௧
நாள் : 01 - 12 - 2024                                                            நாள் :  -  - ௨௦௨௪




இராஜேந்திர சோழன் பெயரில் எழுந்த ஊர்கள்

பரகேசரி

சிதம்பரத்துக்கு அண்மையில் பரகேசரி நல்லூர் என்னும் ஊர் உள்ளது. பரகேசரிப் பட்டம் உடைய மன்னன் காலத்தில் அஃது உண்டாயிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. அங்கு இருங்கோளன் என்னும் குறுநில மன்னன் கட்டிய கோவில் விக்கிரம சோழேச்சரம் என்று பெயர் பெற்றது. 

     பரகேசரி நல்லூர் என்ற அவ்வூர் இப்பொழுது பரமேஸ்வர நல்லூர் என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் இராஜேந்திர சோழனின் பட்டப் பெயர்களில் எழுந்த ஊர்களுள் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment